நடிகை ராணி பத்மினி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற காவலாளியை சிறையில் இருந்து விடுவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழில் ‘வில்லியனூர் மாதா’, ‘நிரபராதி’ உள்ளிட்ட திரைப்படங்கள், மலையாளம், தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராணி பத்மினி. இவர் சென்னை அண்ணா நகரில் தாய் இந்திராகுமாரியுடன் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த 1986ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் வேலை செய்துவந்த கார் ஓட்டுநர் ஜெபராஜ், காவலாளி லட்சுமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகியோர் நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து 1989ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில், ஓட்டுநர் ஜெபராஜுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், மற்ற இருவரையும் விடுவித்தும் உயர் நீதிமன்றம் 1990ம் உத்தரவிட்டது.
இருவர் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலையில் காவலாளி லட்சுமி நரசிம்மனுக்கும் பங்கு இருப்பதால், செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது சரிதான் என்று கருத்து தெரிவித்து, ஓட்டுநர் ஜெபராஜுக்கு வழங்கப் பட்டதுபோலவே, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2001ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, லட்சுமி நரசிம்மன் மீண்டும் 2001ம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள லட்சுமி நரசிம்மன் தன்னை விடுதலை செய்யக் கோரி அரசுக்கு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, அவரது மனைவி எஸ்.எல்.மேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், சதீஸ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இவருக்கு தூக்கு தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்தது. அந்த தண்டனை சரிதான் என உச்ச நீதிமன்றம் கருத்து தொரிவித்து. தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. எனவே மேலும் தண்டனை குறைப்பு செய்ய கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனை விதித்தாலும் மற்ற ஆயுள்தண்டனை கைதிகளோடுதான் சமமாக கருதவேண்டும். எனவே
சிறையில் உள்ள லக்சுமி நரசிம்மன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.