நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை செல்வம் என்பவர் விசாரணைக்கு ஆஜராக சென்னை போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் நடித்து வந்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2008-ல் சீமான் தன்னை திருமணம் செய்து 3 ஆண்டுகளில் ஏமாற்றிவிட்டார் என்று 2011-ம் ஆண்டு புகார் அளித்தார். பின்னர், இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு பெங்களூரு சென்றார். நடிகை விஜயலட்சுமி.
அவ்வப்போது, சமூக வலைதளங்களில் சீமான் மீது புகார்கள் கூறிவந்த நடிகை விஜயலட்சுமி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னைக்கு வந்து மீண்டும் சீமான் மீது புகார் அளித்தார். அதில், மதுரை செல்வம் என்பவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
விஜயலட்சுமி அந்தப் புகாரில் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி ஆதரவு அளித்து அடைக்கலம் கொடுதார்.
விஜயலட்சுமி முன்வைத்த குற்றச்சாட்டுகளை சீமான் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரை மிக கடுமையாக விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார்.
விஜயலட்சுமி அளித்த புகாரில் அனுப்பப்பட்ட சம்மனுக்காக, சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, விஜயலட்சுமி- வீரலட்சுமி இருவரையும் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார்.
நடிகை விஜயலட்சுமி, பலரையும் மிரட்டி பணம் பறிப்பவர் என்றும் சில ஆதாரங்களை வெளியிட்ட சீமான், வீரலட்சுமி தம்மிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மான நஷ்ட வழக்கும் தொடர்ந்தார். இதற்கு எதிராக வீரலட்சுமியும் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
சீமானின் பேட்டியால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, நானும் என் சகோதரியும் தற்கொலை செய்யப் போகிறோம். இனியாவது சீமானை கைது செய்து சிறையில் அடையுங்கள் என வீடியோ வெளியிட்டார்.
அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் விஜயலட்சுமி- சீமான் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் விஜயலட்சுமி ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சீமானுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி பணம் கொடுத்து உதவியதாக சொல்லப்படும் மதுரை செல்வம் என்பவரை சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்கு திங்கள்கிழமை (அக்டோபர் 2) ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான சம்மன் கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.