Seeman Vijayalakshmi Case: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் காரணமாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சீமானுக்கு காவல்துறை சார்பில் 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி புகாரை திடீரென வாபஸ் பெற்றார்.
அதற்கு முன் சீமான் தரப்பில் நடிகை விஜயலட்சுமி மீது ரூ.1 கோடி கோரி மானநஷ்ட வழக்கு போடப்பட்டது. இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமியை நாம் தமிழர் சார்பு வலையொளிகள் விமர்சிப்பதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை சுட்டிக் காட்டியுள்ள நடிகை விஜய லட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இது தொடர்ந்தால் தாம் கர்நாடக போலீசில் சீமான் மீது புகார் அளிக்க உள்ளதாகவும், அங்கிருந்து வழக்கை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“