Advertisment

'முக்தார் ஏன் போன் பண்றார்?' மீண்டும் வீடியோவில் கொதித்த விஜயலட்சுமி

முக்தார் அகமது தனக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாகவும், அடிக்கடி போன் செய்து தொல்லை செய்து வருவதாகவும் விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Vijayalakshmi on Mukthar Ahmed Sathiyam TV

முக்தார் கூப்புடுகிறார், முக்தார் கூப்புடுகிறார்... என்கிற புகார் எனக்கு வந்துகொண்டே இருக்கிறது. இப்ப கூட 10 நிமிஷத்துக்கு முன்னால முக்தார் போன் செய்தாருனு வீரலட்சுமி கூறினார்.

Actress Vijayalakshmi - Mukthar Ahmed Tamil News: தமிழில் ஆர்யா நடித்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கன்னடம் மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மீண்டும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நடிகை விஜயலட்சுமியிடம் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். மேலும், திருவள்ளூர் மாவட்ட மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அதேநேரத்தில், சீமான் தன்மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தனது பொதுத்தேர்தல் பணிகளை திசை திருப்புவதற்காகவே இத்தகைய புகார்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், உதகையில் இருந்த சீமானை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் உதகையில் இருந்து கோவை வந்த சீமான், அப்படி எந்த போலீசும் தன்னை தேடி வரவில்லை. தான் சென்னை செல்கிறேன். அங்கு போலீசார் த ன்னிடம் விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்தார்.

வீடியோவில் கொதித்த விஜயலட்சுமி

சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்து வருபவர் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி. இந்நிலையில், வீரலட்சுமிக்கு பத்திரிகையாளர் முக்தார் அகமது தொலைபேசியில் அழைத்து தன்னிடம் பேச வேண்டும் என்றும், தனக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாகவும் அடிக்கடி போன் செய்து தொல்லை செய்து வருவதாகவும் விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியது பின்வருமாறு:-

கடந்த 2 நாட்களாக முக்தார் அகமது வீரலட்சுமிக்கு தொலைபேசியில் அடிக்கடி அழைத்து பேசி தொல்லை செய்து வருகிறார். அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாக வீரலட்சுமியிடம் கூறியிருக்கிறார். நான் வீரலட்சுமியிடம் அவரிடம் இருந்து எந்த உதவியும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் நேர்காணல் கேட்டிருந்தார், அதை நான் ஏற்கனவே கொடுத்து விட்டேன். அவரின் உதவி தேவையில்லை என்று கண்டிப்புடன் கூறினேன்.

ஆனாலும், முக்தார் கூப்புடுகிறார், முக்தார் கூப்புடுகிறார்… என்கிற புகார் எனக்கு வந்துகொண்டே இருக்கிறது. இப்ப கூட 10 நிமிஷத்துக்கு முன்னால முக்தார் போன் செய்தாருனு வீரலட்சுமி கூறினார்.

இந்த விஷயத்தை நான் பகிர காரணம், நான் கொடுத்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் குறித்து என்னிடமும் விசாரித்து வருகிறார்கள். இப்படியான சூழலில் முக்தார் கூப்புடுகிறார் என்கிற பிரச்சனை வந்துள்ளது. முக்தார் உதவுதுபோல் விளையாடுகிறாரா அல்லது அவரை வைத்து வேறு யாரேனும் காய் நகர்த்துகிறார்களாக என்று தெரியவில்லை.

எனக்கு எந்த மனிதரிடம் இருந்து உதவி வேண்டாம். நான் ரொம்ப கடுமையா கண்டிக்கிறேன். அப்படி யாரவது என்னிடம் விளையாட நினச்சா அவர்கள் மீதும் நான் புகார் கொடுத்து, போட்டு போட்டு மிதிப்பேன். முக்தார் அகமத்துக்கு சொல்றேன், உங்கள வேலைய பாத்துக்கிட்டு நீங்க போயிகிட்டே இருங்க. இதெல்லாம் என்கிட்டே வேண்டாம். பேட்டி கேட்டிங்க அது குடுத்தாச்சு. உங்க உதவி வேண்டாம்ன்னு நான் தமிழ்ல தான் சொன்னேன்னு நினைக்கிறன். அது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். இதுக்கு மேல முக்தார் அகமது அவர்கள் வீரலட்சுமிக்கு போனில் கூப்புடாதிங்க.

இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman Chennai Vijayalakshmi Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment