நடிகை விஜயலட்சுமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில், “சீமான் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மீதான வழக்கை மூடி மறைத்து வெளியே உத்தமன் போலப் பேசுகிறார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
என்ஐஏ சோதனை
தொடர்ந்து என்ஐஏ விவகாரம் குறித்து பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் என்ஐஏ அதிகாரிகளிடம் என்ன விளக்கம் கொடுத்துள்ளார்?
ஈழத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போதும், தலைவர் கொலை செய்யப்பட்ட போதும் சீமான் என்ன ஆட்டம் போட்டார் என்பதை நான் தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
மீண்டும் வருவேன்
இந்த நிலையில், “நான் மீண்டும் சென்னை வருவேன். இம்முறை ஊடகங்கள் முன்னிலையில் அனைத்தையும் சொல்வேன்.
சீமான் என்னிடம் என்ன ஆட்டம் போட்டார்; மதுரை செல்வத்தை வைத்து எப்படி பேசினார் என்பதெல்லாம் கூறி அவரின் மானத்தை வாங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, “மாநில காவல்துறை சீமானை காப்பாற்றிக் கொண்டுள்ளது; இனியும் விடமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சீமான் சினிமாவில் இயக்குனர், நடிகராக இருந்து அரசியல் இயக்கம் தொடங்கினார். இவரின் இயக்கத்தில் நடிகை விஜயலட்சுமி படம் ஒன்றில் நடித்தார்.
பாலியல் புகார்
அப்போது, “சீமான் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி தன்னிடம் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்தார்” என நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“