‘எனக்கு என்ட் கார்டு போட எவனாலும் முடியாது ராசா!’ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… கடுப்பான விந்தியா!

“ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.” என்று நடிகை விந்தியா பதிலடி கொடுத்துள்ளார்.

actress vindhyaa, விந்தியா, கண்ணீர் அஞ்சலி போஸ்டர், நடிகை விந்தியா, vindhyaa bold respond to condolence poster stick for her, dmk, aiadmk, திமுக, அதிமுக

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து கடுப்பான நடிகை வினிதா, “எனக்கு என்ட் கார்டு போட எவனாலும் முடியாது ராசா” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை விந்தியா 1999ம் ஆண்டு சங்கமம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் நடிகை விந்தித்யாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. திருநெல்வேலி, மகளிர்க்காக, சார்ளி சாப்ளின், ரெட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். நடிகை விந்தியா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும் நடித்தார்.

விந்தியாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வந்த அவர், நடிகை பானுபிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அவர் திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்திக்கொண்டார்.

பின்னர், விந்தியாவுக்கும் அவரது கணவர் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, 2012ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து, சில படங்களில் நடித்து வந்த விந்தியா, படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு அரசியலில் களம் இறங்கினார்.

அதிமுகவில் இணைந்த நடிகை விந்தியா 2011ம் ஆண்டு முதல் அதிமுகவுக்காக தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 2020ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட விந்தியா, இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இந்த நிலையில், நடிகை விந்தியா தான் உயிருடன் இருக்கும்போது திமுகவினர் சிலர் தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் “எனக்கு என்ட் கார்டு போட எவனாலும் முடியாது ராசா” என்று அவர்களுகு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து நடிகை விந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.” என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதைப் பார்த்து கடுப்பான நடிகை விந்தியா, “ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.” என்று திமுகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress vindhya responding for her tearful tribute poster pasted persons

Next Story
சென்னையில் தற்காலிக தடுப்பூசி மையங்கள்: கோவாக்சின் தட்டுப்பாடு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com