/tamil-ie/media/media_files/uploads/2022/04/stalin-kushbu.jpg)
Actresses Khushbu, Suhasini take photo with CM Stalin: ஊடக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தென் மண்டலம் சார்பில் தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் நடந்து வருகிறது.
சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இதையும் படியுங்கள்: ஹிந்தி தெரியாது… ஆனா தெரியும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் முரண் பேச்சு
அப்போது நடிகைகள் குஷ்பூ, சுஹாசினி உள்ளிட்ட முன்னனி நடிகைகள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனை நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, எங்களில் ஒரு பகுதியாக இருந்ததற்கும், இதயத்திலிருந்து பேசியதற்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஊக்கமளித்து என்று பதிவிட்டுள்ளார்.
Thank you H'ble CM Thiru @mkstalin avl for being part of us and speaking from your heart. Your words inspire. 🙏🙏🙏 pic.twitter.com/itjaiVYUOY
— KhushbuSundar (@khushsundar) April 9, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.