26 castes to Centres OBC list: சேர்வை, அன்சார், ஆயிரவைசியர், சவுத்ரி, கள்ளர் குல தொண்டமான், கன்னடியநாயுடு, கற்பூர செட்டியார், காசுக்கார செட்டியார், கொங்கு வைஷ்ணவா, குடிகார வெள்ளாளர், குக வெள்ளாளர், மூன்று மண்டல 84 ஊர் சோழிய வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வேளாளர், ஒபிஎஸ் வெள்ளாளர், பய்யூர் கோட்ட வேளாளர், கத்திகாரர்( கன்னியாகுமரி மாவட்டம்), பொடிகார வேளாளர், பூலுவ கவுண்டர், ரெட்டி (கஞ்சம் ) ஷேக், சுந்தரம் செட்டி, சையத், உக்கிரகுல சத்திரிய நாயக்கர், உரிக்கார நயக்கர், வேளார் ஆகிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதிகளும்; சீர் மரபினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளில் சேர்வை (திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) என்னும் சாதியும் மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் இடம் பெறவில்லை.
எனவே மத்திய அரசு நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் போது இப்பிரிவில் இருந்து வரும் மாணவர்கள் பொதுப்பட்டியலிலேயே வைக்கப்படுகிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சாதிகளின் பட்டியலில் பெரும்பாலானவை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ( OBC) இடம் பெற்றுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மேலே கூறப்பட்ட பிரிவுகள் மத்திய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த 26 சாதிகளின் இட ஒதுக்கீடு உரிமைகளை பாதுகாக்கவும் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதியின் எம்.பியுமான ரவிக்குமார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் விழுப்புரம் கந்தசாமி லேஅவுட் பகுதியில் வசித்து வரும் அமிர்தவர்ஷினி என்பவர் ஆயிர வைசியர் பிரிவை சார்ந்தவர். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இந்த பிரிவு. ஆனால் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இந்த பிரிவு இடம்பெறவில்லை. மாறாக பொதுப்பிரிவு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் அவருடைய தரவரிசை எண் 10528 ஆக ஆகியுள்ளது. அதனால் அவர் விரும்பிய ஃபேஷன் டெக்னாலஜி துறையில் படிப்பதற்கான வாய்ப்பை இழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் ரவிக்குமார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.