அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
Advertisment
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை தீர்பாக வழங்கினர்.
.இந்த வழக்கில் தற்போது, சி.வி.கார்த்திகேயன் 3வது நீதிபதியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர், 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சி.வி. சிம்மராஜ சாஸ்திரி மற்றும் சரஸ்வதி எஸ். சாஸ்திரிக்கு மகனாக பிறந்தார்.
சென்னை, ராயபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் ஆரம்பப் பள்ளிப் படிப்பையும், பின்னர் சென்னை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளியையும் முடித்தார்.
1989, ஆகஸ்ட் 23ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் மாவட்ட நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய உத்தரவுகள்
விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் பூட்டப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். முன்னதாக, 2020ஆம் ஆண்டு நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் குளறுபடி தொடர்பாக, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவரின் சேர்க்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகிய இரு அதிமுக-வினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தார்.
இதேபோல் பல்வேறு முக்கிய வழக்கில் இவர் நீதிபதியாக இருந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“