ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை: உடனே விண்ணப்பியுங்கள்- கடைசி தேதி பிப். 18

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் விடுதிகளில் சேர 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் விடுதிகளில் சேர 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
school aadhaar

Apply now for Adi Dravidar Welfare Hostels for the 2025-26 academic year

ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர்வதற்குத் தகுதியான பள்ளி மாணவர்கள், பிப்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://nallosai.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்குவதற்கு, மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கூடுதல் தகவல்கள்

2024-25 ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்துறையின் கீழ் 1,141 பள்ளி விடுதிகள், 152 கல்லூரி விடுதிகள், 18 ஐடிஐ விடுதிகள், 5 பாலிடெக்னிக் மற்றும் 15 முதுகலை கல்லூரி விடுதிகள் என மொத்தம் 98,909 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்த புதிய கல்வி ஆண்டில், ஒவ்வொரு விடுதியிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கூடுதல் தகவல்களைப் பெற, 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் நலத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: