கடலூர் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை தொடக்கம்: மாணவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

கடலுார் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுடைய மாணவ மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர உரிய நேரத்திற்குள் விண்ணப்பித்து, தேர்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார தெரிவித்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுடைய மாணவ மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர உரிய நேரத்திற்குள் விண்ணப்பித்து, தேர்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Sports hostel

Admissions begin in TN sports hostels

செய்தி: பாபு ராஜேந்திரன்

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் 28 இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டுவருகின்றன.

Advertisment

இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ஏப்ரல் 18 முதல் WWW.sdat.tn.gov.in என்றஇணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும்மாணவ மாணவிகள்விண்ணப்பத்தினை 05.05.2025 அன்றுமாலை 5.00 மணி வரை இணையதளத்தில்பதிவேற்றம் செய்யலாம்.

தேர்விற்கு இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பம் அளித்த கடலுார் மாவட்டத்தைச் சார்ந்தமாணவ, மாணவியர்களுக்கானமாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள்வருகின்ற07.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் மாணவர்களுக்கும், 08.05.2025அன்றுகாலை 7.00 மணியளவில் மாணவியர்களுக்கும் கடலுார் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும்தேர்வுப் போட்டியில், விண்ணப்பம் செய்ததற்கானஉரியஆவனங்களுடன்கலந்துகொள்ளவேண்டும்.

Advertisment
Advertisements

மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலானதேர்விற்குதகுதிபெறுவார்கள்.அதன் விபரம் SDATஇன் அதிகார பூர்வமானஇணைய தளத்தில்வெளியிடப்படும். மேலும்நேரடியாகமாநில அளவிலானதேர்வுப் போட்டிகள், வால்வீச்சு, ஜுடோ, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்குசென்னை நேரு விளையாட்டு அரங்கிலும்,ஸ்குவாஷ் போட்டிக்குசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும்,பளுதூக்குதல்,உஷூஆகிய விளையாட்டுகளுக்குதஞ்சாவூரில் உள்ள அன்னை சத்தியா விளையாட்டு அரங்கிலும்,நீச்சல் விளையாட்டுக்குசென்னைவேளச்சேரியில் உள்ளநீச்சல்வளாகத்திலும்,Handball விளையாட்டிற்குதிருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிலும்,மல்யுத்தம், டேக்வோண்டோ ஆகிய விளையாட்டிற்குகடலுார் அண்ணா விளையாட்டு அரங்கிலும்,மல்லர் கம்ப விளையாட்டிற்குவிழுப்புரம்விளையாட்டு அரங்கிலும்,12.5.2025 அன்றுகாலை7.00 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

எனவேகடலுார் மாவட்டத்தைச் சார்ந்ததகுதியுடையமாணவ மாணவிகள்விளையாட்டு விடுதியில் சேர உரிய நேரத்திற்குள் விண்ணப்பித்து, தேர்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார தெரிவித்துள்ளார்.

Sports

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: