ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக அதிமுக தரப்பில் 106 பேர்கொண்ட பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம். எல்.ஏ. வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமுருகன் ஈ.வெ.ரா ஜனவரி மாதம் 4-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-க்கு இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மைய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இடைத் தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது.

தற்பொழுது அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 105 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ,வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்,



அதிமுக சார்பில் போட்டியிடம் வேட்பாளர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவிக்கவில்லை. முன்னதாக திமுக தலைமையில் 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

