பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழித்தது தொடர்பாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது கமுதி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
டிடிவி தினகரன் வழக்குப்பதிவு:
கடந்த 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துக் கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவர்களின் வருகையொட்டி சாலையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதே போல் தேவரின் சிலைக்கு அமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் வந்து சென்றபின் அங்கிருந்த அதிமுக பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு இருக்கிறது. சில மர்ம நபர்கள் அங்கிருந்த அதிமுக பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை கிழித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம், டிடிவி தினகரன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் என்று அதிமுகவினர் குற்றம்சாடினர்.
இந்நிலையில் அதிமுக பேனர்கள் கிழித்தது தொடர்பாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது கமுதி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்று காலை இந்த வழக்கு தொடர்பாக அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.