சென்னை மயிலாப்பூரில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல் மற்றும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தமிழிசை சௌந்தரராஜன் பயனாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான அட்டை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசையிடம் எடப்பாடி பழனிசாமியின் கருத்து பற்றி கேள்வி எழுப்பபட்டது. அவர் பதிலளிக்கையில், 2026ஆம் ஆண்டுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. திமுக கூட்டணியில் இருந்தும் கட்சிகள் பிரிந்து வரலாம். ஒத்த கருத்து என்று கூட்டணி சேர வேண்டும் என்றால், கொள்கை தேவையில்லை. அரசியல் என்பது தேர்தல் கணக்கு தான். தேர்தல் நேரத்தில் பிணக்கும் வரலாம், கணக்கும் வரலாம். எல்லாமே தேர்தல் கணக்கு தான்.
எடப்பாடி பழனிசாமி சொல்லும் ஒத்த கருத்து என்றால் என்ன? எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் ஒத்த கருத்து இன்றைய மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆக அந்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒத்துப் போய் வந்தால் நல்லது என்பது என்னுடைய கருத்து. அதை முடிவு செய்வது எங்களது அகில இந்திய தலைமை.
எடப்பாடி பழனிசாமி 2026க்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகத்தான் சொல்கிறார். ஆனால் அதற்குள் ஜெயக்குமார் போன்றவர்கள் ஏன் ஒரு தெளிவான முடிவை எடுத்து அறிவிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கால அவகாசம் இருக்கிறது. பாஜக கூட்டணியில் பல பேர் வந்து சேரலாம். பாஜகவோடு, சேர்ந்து பல கட்சிகள் கூட்டணி அமைக்கலாம்.
2026க்கு கால அவகாசம் உள்ளது. திமுக தங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை சொல்ல முடியாது. அதேபோல், எதிரணியும் இதுதான் கூட்டணி என்று சொல்ல முடியாது. அதனால் கூட்டணிக்கு இன்னும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“