Advertisment

கருணாநிதி படத் திறப்பு: ஜனாதிபதி நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக; காரணம் இதுதான்..!

ADMK boycott tamilnadu assembly centenary celebration and karunanidhi portrait unveil: கருணாநிதியின் படத்திறப்பு நிகழ்ச்சியோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையும் புறக்கணித்த அதிமுக

author-image
WebDesk
New Update
கருணாநிதி படத் திறப்பு: ஜனாதிபதி நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக; காரணம் இதுதான்..!

கருணாநிதியின் படத்திறப்பு நிகழ்ச்சியோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையும் அதிமுக புறக்கணித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா இன்று (ஆகஸ்ட்) நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவின், முக்கிய நிகழ்வாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது. கருணாநிதியின் புகைப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்து புகழ்ந்து பேசினார்.

விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் பெருமையையும், கருணாநிதியையும் புகழ்ந்து பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மிகப்பெரிய விழாவான இந்த நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சியான அதிமுக கலந்துக் கொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் கலந்துக் கொள்வதால் அதிமுக கலந்துக் கொள்ளும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அதிமுக புறக்கணித்துள்ளது.

இதற்கு காரணமாக, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில், சட்டமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படத்திறப்பு விழாவில், அப்போதைய எதிர்க்கட்சியான திமுக அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாதது தான் என கூறப்படுகிறது.

மேலும், சுதந்திரத்திற்கு பிறகு 1952 ஆம் ஆண்டில் நடந்த முதல் சட்டமன்றத்தை தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அப்போதுதான் நாடு சுதந்திரம் பெற்று குடியரசாக இருந்தது. 1921 இல் நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது நிறுவப்பட்ட சட்டமன்றம் எப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது? என்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விழாவிற்கு முன்னதாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான ஜெயக்குமார், சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக கூறினார். மேலும், சட்டபேரவை வரலாற்றி மாற்றி எழுதி திமுக விழா கொண்டாடுகிறது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவை திமுக புறக்கணித்த நிலையில், கருணாநிதி படத்திறப்பில் நாங்கள் எப்படி கலந்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Admk Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment