புதுச்சேரியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அமமுக நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Advertisment
புதுச்சேரியில் எடப்பாடி அணியினர் ஒரு பிரிவாகவும், ஓபிஎஸ் ஆதரவாளர் ஒரு பிரிவாகவும், அமமுகவினர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளம் அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளரான ஓம் சக்தி சேகர் தலைமையில் தனியாக ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக கடலூர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓம் சக்தி சேகர் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் மற்றும் அக்கட்சியினர் ஒன்றிணைந்து வந்து ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Advertisment
Advertisements
இதுபோன்று அனைவரும் ஒருங்கிணைந்து ஜெயலலிதா பிறந்தநாளில் சேர வேண்டுமென ஓம் சக்தி சேகர் அழைப்பு விடுத்தார். புதுச்சேரியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நல்லபடியாக துவங்கும். அதே போல இப்பொழுது துவங்கியிருப்பது போல தமிழகத்திலும் உள்ள தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென ஓம் சக்தி சேகர் கேட்டுக் கொண்டார்.
பிளவுபட்ட அதிமுகவின் அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்களோடு இணைந்து ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர். வரும் காலங்களில் தமிழகத்தில் அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என ஓம் சக்தி சேகர் கேட்டுக்கொண்டார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“