scorecardresearch

குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000: ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க புகார்

ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000: ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க புகார்

ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தை  விதிகளை மீறியதாக முதலமைச்சர்  ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்த்ல் கடந்த பிப்.27ம் தேதி நடைபெற்றது.  வாக்குப்பதிவு மார் 2ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் நின்ற காங்கிரஸ் கட்சி 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது. அதிமுக கூட்டணிக்கு 43,981 வாக்குகள் பெற்றது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக முதல்வர் ஸ்டாலின் மீது, அமைச்சர்கள் மீது அதிமுக வழக்கறிஞர் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். எந்த மாதிரியான விதி மீறல்களை திமுக செய்துள்ளது என்பதை இதில் குறிப்பிட்டுள்ளனர். வாக்காளர்களை அடைத்து வைத்து தேர்தல் பரப்புரை செய்தது. விலங்குகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது. பள்ளி வளாகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது” போன்ற புகார்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகரிகளிடம் புகார் கொடுத்தும் பயனில்லை என்பதால் இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk case on cm stalin in indian election commision

Best of Express