/tamil-ie/media/media_files/uploads/2019/06/dddd.jpg)
admk, modi, edappadi palanichamy, jayalalitha, dmk, assembly election, prasanth kishore, jagan mohan reddy, அதிமுக, மோடி, எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா, திமுக, சட்டசபை தேர்தல், பிரசாந்த் கிஷோர், ஜெகன் மோகன் ரெட்டி
2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடர செய்யும் நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி களமிறங்கியுள்ளார். நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டில்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, அங்கு பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். 2014ம் ஆண்டில், நரேந்திர மோடி பிரதமராவதற்கு, ஐபேக் நிறுவனம் பின்னணியில் இருந்து செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது அதேபோல், பீகாரிலும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர், பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லாதது அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியாக உள்ளது. இதனால், பல்வேறு கட்சிகளுக்கு வெற்றி பெற்று தந்த பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை நாட முதல்வர் பழனிசாமி நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.