தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், சென்னையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு கள்ள ஓட்டு போட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை மறைப்பதற்காக திமுக பல்வேறு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டை போன்று சென்னை மாநகராட்சியை புறவாசல் மூலமாக கைப்பற்ர திமுக முயற்சி. கள்ள ஓட்டு போட்ட திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பல வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு முகவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவினர் கள்ள ஓட்டு போட்டது தொடர்பான வீடியோ பதிவை காவல் ஆணையரிடம் வழங்கியுள்ளோம் என்றார்.
முன்னதாக, அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.எம்.பாபு முருகவேல், மாநில தேர்தல் ஆணையரிடம் அளித்த புகாரில், சென்னை மாநகராட்சியில் ஆளும் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 26 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது அவசியம் என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil