ஸ்டாலினுக்கு 3-வது முறை நன்றி சொன்ன ஓபிஎஸ்: திமுக- அதிமுக முகாம்களில் ஆச்சரியம்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஓ.பி.எஸ் திமுக அரசுக்கு மூன்றாவது முறையாக நன்றி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

ADMK Coordinator Praising MK Stalin Government : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதி தீவிரமடைந்துள்ளது. திமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, அவ்வப்போது அறிவுரைகளையும் பரிந்துரைகளையும் பன்னீர்செல்வம் வழங்கி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம், அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மா.சுப்ரமணியன் தலைமையிலான ஆலோசனை கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பங்கு பெற்றார். இது போன்ற நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் நிகழ்ந்து வந்தது, அரசியல் நாகரீகமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஓ.பி.எஸ் திமுக அரசுக்கு மூன்றாவது முறையாக நன்றி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா தடுப்பு பணிகளில் பணியமர்த்தப்பட்ட முன்களப் பணியாளர்களை, அவர்களின் பதவியில் இருந்து நீக்க கூடாது என, முதல்வரிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை அடுத்து, அவர்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார். தனது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சரின் செயலுக்கு பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்திருந்தார். அதன் பிறகாக, மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து உத்தரவிட்ட முதல்வரின் செயலுக்கு பன்னீர் செல்வம் நன்றியை தெரிவித்திருந்தார்.

சமீபத்தில், தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவிட, தமிழக அரசு முன்வர வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். பன்னீர்செல்வம் கோரிக்கையை அடுத்த ஒரு நாளில், கொரோனாவுக்கு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இது தொடர்பான தமிழக அரசின் அறிக்கையில், பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் மதீப்பீடு செய்யவும், அவர்களுக்கு 18 வயது நிரம்பியவுடன் வட்டியுடன் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், அந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்களிலும், விடுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும், பட்டப்படிப்பு முடிக்கும் வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணங்களை தமிழக அரசே செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இத்தோடு இந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருப்பது, திமுக மற்றும் அதிமுக வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Admk coordinator panneerselvam ops thanking cm mk stalin dmk cadre

Next Story
ஸ்டாலின் டெல்லி பயணம்: ஏற்பாடுகள் தயார்CM MK Stalin's visit to Delhi, arrangements ready, முதல்வர் முக ஸ்டாலின், ஸ்டாலின் டெல்லி பயணம், ஏற்பாடுகள் தயார், அமித்ஷா, பிரதமர் மோடி, cm mk stalin going to delhi for meet pm modi, amit shah, delhi, tamil nadu house
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com