செங்கோட்டையன் போர்க்கொடி? அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

ADMK district secretaries meeting details: வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும்; அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தல்

rural local body elections results, election results will be big challenge to AIADMK, opposite party AIADMK, OPS, EPS, Sasikala, Jayalalitha, உள்ளாட்சித் தேர்தல், அதிமுக, சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், tamil nadu politics, aiadmk commemorating of 50 years celebration, litmus paper test for AIADMK

வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில், சட்டமன்ற தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், வெற்றி பெறுவதற்கு அதிமுக முனைப்புடன் உள்ளது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காக இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும். 11 பேர் எண்ணிக்கை கொண்ட குழுவை 18 ஆக அதிகரிக்க வேண்டும். வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அடுத்தப்படியாக, அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் வலியுறுத்தினார். கூட்டத்தில் சிலர்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குழு தலைவராகவோ, அவைத்தலைவராகவே நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Admk district secretaries meeting details

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com