அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ் வெளியிட்டார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அ.தி.மு.க புதன்கிழமை காலை முதல் கட்டமாக 16 வேட்பாளார்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக 17 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியலை இன்று இ.பி.எஸ் வெளியிட்டார்.
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - பாபு
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
தருமபுரி - அசோகன்
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி - லோகேஷ்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
சிவகங்கை - சேகர் தாஸ்
நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
விளவங்கோடு இடைத்தேர்தல் – ராணி
மேற்கண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க-வை தவறாக எடை போட வேண்டாம் என அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க 21 தொகுதிகளிலும், அ.தி.மு.க 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும், இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன.
தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி. தி.மு.க, போட்டியிடும் மற்ற 3 தொகுதிகளில் மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க வேட்பாளர்களுக்கு எதிராகவும், தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு எதிராகவும் களம் காண்கிறது.
அதேபோல் அ.தி.மு.க தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் திமுகவோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியி டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மதுரையிலும், வி.சி.க-வுக்கு எதிராக விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.
ம.தி.மு.க-வுக்கு எதிராக திருச்சியிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக ராமநாதபுரத்திலும், கொமதேகவுக்கு எதிராக நாமக்கல் தொகுதியிலும் அதிமுக போட்டியிடுகிறது.
சில தொகுதிகளில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. குறிப்பாக திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், தேமுதிகவும் மோதிக் கொள்கின்றன. அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“