scorecardresearch

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தினகரன், ஓபிஎஸ், சசிகலா, ஆகிய மூவரும் தோட்டா இல்லா துப்பாக்கிகள் என அதிமுக செயலாளர் அன்பழகன் விமர்சனம்.

புதுச்சேரி

தினகரன், ஓபிஎஸ், சசிகலா, ஆகிய மூவரும் தோட்டா இல்லா துப்பாக்கிகள் என அதிமுக செயலாளர் அன்பழகன் விமர்சனம்.

தமிழக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகம் எதிரே பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் தொடர்ந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் ஒழிக என்றும் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என்றும் கோஷங்களையும் எழுப்பினார்கள்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில அன்பழகன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது கட்சியை முடக்கலாம் சின்னத்தை முடக்கலாம் என்று எதிர்பார்த்து இருந்தவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.

 ஒன்ற கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் இதை திமுகவால் ஒன்றும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் குள்ளநரி கூட்டங்களின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றை கோடி தொண்டர்களின் எண்ணம் ஈடேறி உள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில்.அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் போது அம்மாவின ஆட்சி புதுவையிலும் அமையும், என்றும் தினகரன், ஓ.பி.எஸ். சசிகலா ஆகிய மூன்று பேரும் தோட்டா இல்லா துப்பாக்கிகள் என்றும் வெறும் காற்றில் வீச்சருவாள் வீசுபவர்கள் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk eps verdict happy about is and puducherry