அதிமுக ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். அதிமுக வில் ஏற்பட்ட சலசலப்புகளுக்கு மத்தியில், பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ஓரம் கட்டப்பட்டவர் மணிகண்டன. இந்நிலையில், நேற்று நாடோடிகள் பட புகழ் நடிகை சாந்தினி, சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி, ஐந்து வருடங்களாக தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது தமிழ்நாட்டை விட்டவிட்டு தனது சொந்த ஊரான மலேசியாவுக்கு செல்லும் படியும் கூறியதாகவும் கூறியுள்ளார். மேலும், மணிகண்டன் தன்னுடன் இருந்த நாள்களில் பலமுறை கட்டாயப்படுத்தி உறவுக் கொண்டதாகவும் இதனால், தான் பலமுறை உடல் நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சரும் அவரது கூலிப்படைகளும் தன்னை மிரட்டி வருவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து தன்னையும், மலேசியாவில் உள்ள குடும்பத்தையும் அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பயன்படுத்தி விட்டு தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருவாதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகாரையும் நடிகை சாந்தினி அளித்துள்ளார்.
அமைச்சர் மணிகண்டன் மீது, நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், நடிகை சாந்தி யார் என்றே தனக்கு தெரியாது என மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ‘நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். அமைச்சராக இருந்த சமயத்தில் என்னை பலர் அரசியல் நிமித்தமாக சந்தித்துள்ளனர். அவர்களில் ஒருவராக சாந்தினி என்னை சந்தித்திருக்கலாம். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தற்போது என் மீது அவர் பொய் புகார் அளித்துள்ளார். எனது அரசியல் எதிர்களின் பின்னனியில் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
சில தினங்களுக்கு முன்பு, வழக்கறிஞர் ஒருவரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் சாந்தினி உடன் நான் எடுத்ததாக சொல்லப்படும் புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், அதை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் மிரட்டினர். புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால், 3 கோடி ரூபாயை என்னிடம் கேட்டனர். நான் பணம் தர ஒத்துக் கொள்ளாததால், படிப்படியாக இறங்கு வந்து 50 லட்சம் ரூபாயை கேட்டனர். என் மீது தவறு இல்லாததால் தொடரப்படும் வழக்கை சட்டரீதியாக சந்திக்க எண்ணி, மறுத்து விட்டேன். என்னை மிரட்டிய பிறகாக, எனது மனைவியையும் செல்போனில் பேசி மிரட்டி உள்ளனர். பணம் பறிக்கும் கும்பல் நடிகை சாந்தினியை பயன்படுத்தி என் மூலம் ஆதாயம் அடைய பார்க்கிறார்கள். நான் இந்த புகாரை சட்ட ரீதியாக சந்திப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
அதிமுக வை சேர்ந்த மாஜி அமைச்சர் மீது, சினிமா நடிகை பாலியல் குற்றம் சுமத்தி இருப்பது, அரசியல் வட்டாரட்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமைச்சரின் மறுப்பு மேலும் பல விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”