/tamil-ie/media/media_files/uploads/2018/08/d72.jpg)
அதிமுக செயற்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு கூட்டம் : அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில், திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழுவில் மறைந்த திமுக தலைவர் #கருணாநிதி க்கு இரங்கல் தீர்மானம்
#ADMK@dhayaalagiripic.twitter.com/xuqKk4DIHk
— Prashanth Balaraman (@PrashanthAdmk) August 23, 2018
அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர் .
கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் மற்றும் கேரள மழை வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஏ.கே.போஸ் உள்ளிட்ட மூத்த தலைவர் என 120 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த தமிழக அரசை பாராட்டி தீர்மானம், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முழு தகவல்களுக்கு இணைந்திருங்கள்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.