நாடாளுமன்ற தேர்தல் 2019: பொறுப்பாளர்களை நியமித்து குழுக்கள் அமைத்த அதிமுக

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படுத்த தம்பிதுரை உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காகவும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொகுதி பங்கீட்டுக் குழு

கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்

வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்

தங்கமணி, அமைப்புச் செயலாளர், மின்சாரத் துறை அமைச்சர்

எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

பிரபாகர், அமைப்புச் செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை குழு

சி.பொன்னையன், அமைப்புச் செயலாளர்

நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர்

ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர்

சி.வி.சண்முகம், சட்டத்துறை அமைச்சர்

செம்மலை, அமைப்புச் செயலாளர்

மனோஜ் பாண்டியன், அமைப்புச் செயலாளர்

ரபி பெர்னர்ட், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்

தேர்தல் பரப்புரை குழு

மேலும், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளவர்களை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, அதிமுக சார்பில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில்,

தம்பிதுரை, கொள்கை பரப்புச் செயலாளர், மக்களவை துணை சபாநாயகர்

திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர், வனத்துறை அமைச்சர்

கே.ஏ.செங்கோட்டையன், அமைப்புச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

பா.வளர்மதி, செய்தித் தொடர்பாளர்

கோகுல இந்திரா, அமைப்புச் செயலாளர்

பி.வேணுகோபால், நாடாளுமன்ற உறுப்பினர்

வைகைச் செல்வன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close