Advertisment

ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட்டு அவர் வெளியே நடமாட முடியாத நிலையை உருவாக்குவோம்: ஆர்.பி உதயகுமார்

ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் போலியாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; ஓ.பி.எஸ் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் ஒ.பி.எஸ் வீட்டை முற்றுகையிடுவோம் – அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

author-image
WebDesk
New Update
minister RB Udhayakumar demands Madurai 2nd capital of tamil nadu, madurai should be made the second capital of Tamil Nadu, madurai, ஆர்பி உதயகுமார், சென்னை, மதுரை 2வது தலைநகரம், அமைச்சர் ஆர்பி உதயகுமார் கோரிக்கை, 2nd capital madurai, chenani, tamil nadu capital, minister rb udhayakumar

எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று மதுரையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை கேகே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய உதயக்குமார், ”21 ஆம் தேதி இராஜபாளையத்தில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் போலியாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி பெயரில் திரித்து வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளோம்.

இந்தச் செய்தி அவதூறானது. ஓ.பி.எஸ் குறித்து பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல், இப்படி அவதூறு பரப்பியிருக்கிறார்கள். ஒ.பி.எஸ் தூண்டுதலால் என்னை பற்றி திரித்து வெட்டி சேர்த்து அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் இதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். ஓ.பி.எஸ் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் ஒ.பி.எஸ் வீட்டை முற்றுகையிடுவோம். எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம்” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Admk Ops R B Udhaya Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment