Advertisment

உறவினர்களுக்கு ரூ.810 கோடி டெண்டர்: எஸ்.பி வேலுமணி மீது பதிவான எப்.ஐ.ஆர் முழு விவரம்

ADMK former minister SP Velumani DVAC raid FIR for Tender violations: சென்னை, கோவை மாநகராட்சிகளில் ரூ.800 கோடி ஒப்பந்தங்கள்; முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு; லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உறவினர்களுக்கு ரூ.810 கோடி டெண்டர்: எஸ்.பி வேலுமணி மீது பதிவான எப்.ஐ.ஆர் முழு விவரம்

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது உறவினர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவரது உறவினர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலுமணியின் சகோதரர் அன்பரசன், கேசிபி இன்ஜினியர்ஸ் லிமிட்டெட், சந்திரபிரகாஷ், சந்திரசேகர், ஜெசு ராபர்ட் ராஜா, தி ஏஸ் டெக் மெஷினரி காம்போன்ண்ட்ஸ் இந்தியா, கன்ஸ்ட்ரக்ஸன் இன்ஃப்ரா லிமிட்டெட், கன்ஸ்ட்ரோமால் குட் லிமிட்டெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் ஃபவுண்டேசன்ஸ், வல்துர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்‌ஷ்மி ஹோட்டல், ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ், ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா, கேயூ ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி அளித்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

புகாரில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில், ஒப்பந்த பணிகளில் முறைகேடாக, அவரது சகோதரர் மற்றும் உறவினர்களின் நிறுவனங்களான, கேசிபி இன்ஜினியர்ஸ் லிமிட்டெட், கன்ஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா லிமிட்டெட், ஆலயம் பவுண்டேசன்ஸ், கன்ஸ்ட்ராமல் குட்ஸ் லிமிட்டெட், ஏஸ் டெக் மிஷினரி காம்போனண்ட்ஸ் இந்தியா லிமிட்டெட், கன்ஸ்ட்ரக்ஸன் இன்ஃப்ரா லிமிட்டெட்,  ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் ஃபவுண்டேசன்ஸ், வல்துர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்‌ஷ்மி ஹோட்டல், ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ், ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா, வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, மெட்ராஸ் இன்ஃப்ரா, ஓசூர் பில்டர்ஸ், டூ லீப் மீடியா, எஸ்பி பில்டர்ஸ், ஜெ.ராபர்ட் ராஜா, சந்திர பிரகாஷ், சி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் மற்றும் பலரது நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெயர் தெரியாத இரு அதிகாரிகள் விதிகளை மீறி ஒப்பந்தங்களை ஒதுக்கியதாகவும் அமைச்சர் உள்ளிட்ட அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் தரப்பு கோரியிருந்தது.

இதற்கிடையில், W.P.No.34845 of 2018 மற்றும் Crl.O.P.No.23428 of 2018 ஆகிய வழக்குகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு 19.07.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த விஷயத்தை கீழே கொண்டு செல்வதில் அரசு எந்த முயற்சியையும் விடக்கூடாது மற்றும் முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் " மற்றும் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளரின் (சிஏஜி) முன்னிலையில் மேலதிக விசாரணையை நடத்த உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சிஏஜி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவியல் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி. வேலுமணி 1991 முதல் 2001 வரை கோவை மாநகராட்சி மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரராக இருந்தார். 1999 ஆம் ஆண்டில் M/s. பி.செந்தில் & கோ நிறுவனத்தை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தலின்போது, பதிவுசெய்யப்படாத கூட்டாண்மை பத்திரம் மூலம் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பின்னர் வேலுமணி அமைச்சராக இருந்த 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், சென்னை மாநகராட்சியில் ரூ.464.02 கோடி, கோவை மாநகராட்சியில் ரூ. 346.81 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகள் வேலுமணியின் உறவினர் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த பணிகள் அனைத்தும் தமிழ்நாடு ஒப்பந்த விதிகளை (Tamilnadu Transparency in Tenders Act 1998, Rule 31 Tamilnadu Transparency in Tenders Rules 2012,) மீறி, அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வழங்கப்பட்டுள்ளது.

வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நிறுவனமான பி.செந்தில் & கோ, கோவை மாநகராட்சியில் 2014 முதல் 2017 வரை 47 ஒப்பந்தங்களை எடுத்துள்ளது. அந்நிறுவனம் ராஜன் ரத்தினசாமி என்ற பெயரில் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. மேலும், முருகேசன் என்ற பெயரில் உள்ள எஸ்.பி.பில்டர்ஸ் 130 ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. மேலும் ஒப்பந்த ஏலத்தில் வேலுமணியின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமே கலந்துக் கொண்டு, அவர்கள் முறைகேடாக ஒப்பந்தங்களை பெற்று வந்துள்ளனர். கோவை மாநகராட்சியில், எஸ்.பி.பில்டர்ஸ் நிறுவனம் ரூ.16.62 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்பணிக்கு ரூ.21.42 கோடியை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில், பிரைமரி ஹெல்த் செண்டர்களில் 302 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ரூ.5,04,17,100 மதிப்பிலான ஒப்பந்தத்தை வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் விதிகளை மீறி எடுத்துள்ளது. இந்த டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அவரது உறவினர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

வேலுமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அடைந்த வளர்ச்சி மதிப்பு எஃப்.ஐ.ஆரில் கொடுக்கப்பட்டுள்ளவாறு.

வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 2012-13ல் ரூ.2.02 கோடியாக இருந்த நிலையில், 2018-19 ல் ரூ.66.72 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 3202.90% வளர்ச்சி அடைந்துள்ளது.

சி.ஆர். கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனத்தின் மதிப்பு 2012-13ல் ரூ.0.38 கோடியாக இருந்த நிலையில், 2018-19 ல் ரூ.43.56 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 11363.15 % வளர்ச்சி அடைந்துள்ளது.

கேசிபி இன்ஜினியர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் மதிப்பு 2012-13ல் ரூ.42.54 கோடியாக இருந்த நிலையில், 2018-19 ல் ரூ.453.92 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 967.04% வளர்ச்சி அடைந்துள்ளது.

தி ஏஸ் டெக் மெஷினரி காம்போன்ண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மதிப்பு 2012-13ல் ரூ.34.20 கோடியாக இருந்த நிலையில், 2018-19 ல் ரூ.155.42 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 354.44% வளர்ச்சி அடைந்துள்ளது.

பி.செந்தில் & கோ நிறுவனத்தின் மதிப்பு 2012-13ல் ரூ.7.68 கோடியாக இருந்த நிலையில், 2018-19 ல் ரூ.16.28 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 112% வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆலயம் ஃபவுண்டேசன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 2012-13ல் ரூ.0.55 கோடியாக இருந்த நிலையில், 2018-19 ல் ரூ.15.05 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 2636.36% வளர்ச்சி அடைந்துள்ளது.

ஒசூர் பில்டர்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 2015-16ல் ரூ. 0.93 கோடியாக இருந்த நிலையில், 2017-18 ல் ரூ.19.61 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 2008.60% வளர்ச்சி அடைந்துள்ளது.

கன்ஸ்ட்ரக்சன் இந்தியா நிறுவனத்தின் மதிப்பு 2015-16ல் ரூ. 0.86 கோடியாக இருந்த நிலையில், 2017-18 ல் ரூ.42.11 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 4796.50% வளர்ச்சி அடைந்துள்ளது.

கன்ஸ்ட்ரோமால் குட் லிமிட்டெட் நிறுவனத்தின் மதிப்பு 2018-19ல் ரூ. 0.84 கோடியாக இருந்த நிலையில், 2019-20 ல் ரூ.3.14 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 273.81% வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 2018-19ல் ரூ. 106.92 கோடியாக இருந்த நிலையில், 2019-20 ல் ரூ.160.60 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனம் 50.21% வளர்ச்சி அடைந்துள்ளது

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Minister Sp Velumani Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment