அ.தி.மு.க பொதுக்குழு: கே.பி முனுசாமி- சி.வி சண்முகம் திடீர் வாக்குவாதம் ஏன்?
Reason behind KP Munusamy - CV Shanmugam heated argument at the ADMK general council meeting Tamil News: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என கே .பி. முனுசாமியிடம் விவாதம் செய்தார்.
ADMK general council meeting: KP Munusamy - CV Shanmugam Tamil News: அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரத்தில் சரியாக 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக் குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக் குழு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisment
இதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இந்தத் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழி மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்களில் குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ரத்து செய்யவும், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும் தீர்மா னங்கள் நிறை வே ற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டா ர். 4 மாதங்கள் கழித்து அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு முறைப்படி தேர்தல் நடைபெறும் எனவும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
கே.பி முனுசாமியுடன் சி.வி.சண்முகம் கடும் வாக்குவாதம்…
இந்தப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே , ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தொண்டர்களில் பெரும்பகுதியினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மேடையில் இருந்த முக்கிய தலைவர்கள் இது குறித்து விவாதித்து வந்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே .பி. முனுசாமி - சி.வி. சண்முகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சி.வி. சண்முகம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என கே .பி. முனுசாமியிடம் விவாதம் செய்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர், அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.