அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சுற்றுப்பயணமாக வந்தபோது, காவல் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அ.தி.மு.க சார்பில் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/f6d4eefb-863.jpg)
அந்தவகையில், இன்று சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் அஜித்குமார் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்திற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வரைவு காசோலையை வழங்கினர். இந்த நிகழ்வில் பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.