அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி உள்ள நிலையில், அமைச்சர் வேலுமணி மீது திமுக தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர்.
மேலும், மின்வெட்டுப் பிரச்சினையை திமுக தற்போது கையிலெடுத்துள்ளது. இந்த நிலையில், இன்று மாலை அதிமுகவின் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் கூடியுள்ளது.
அதன்படி இன்று மாலை 6 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் குட்கா விவகாரம் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பற்றி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.