Advertisment

அ.தி.மு.க பிரமுகர் மகன் கொலை; 5 ரவுடிகள் கைது

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், இவரது மனைவி கயல்விழி சேகர், திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்தனர். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், இவரது மனைவி கயல்விழி சேகர், திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்தனர். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

சேகர்-கயல்விழி தம்பதியினரின் மகன் முத்துக்குமார் (32 ). இவர் பிபிஏ படித்துவிட்டு தொழிலை கவனித்து வந்தார். இதற்கிடையே பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக கேபிள் சேகர் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்தது.

இதில் கடந்த 2011-ம் ஆண்டு கேபிள் சேகரை பெரியசாமியின் மகன் சிலம்பரசன் அவரது வீட்டருகே வெட்டி படுகொலை செய்தார். அதன் பின்னர் கடந்த 2021ல் பழிக்கு பழியாக சிலம்பரசனை, கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் கொலையாளிகள் சரண்டர் ஆனதால், அந்த வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்த முத்துக்குமாருக்கு வரும் 23-ம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 இந்தநிலையில், தனது குடும்பத்தில் தனது சகோதரனை இழந்து நிம்மதி இல்லாமல் இருந்த சிலம்பரசனின் தம்பி லோகநாதன், முத்துக்குமாரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டி வந்தார். இந்த சூழலில் முத்துக்குமார் அவருடைய நண்பருடன் எஸ்.ஐ.டி.கல்லூரி அருகே டீ குடித்துக்கொண்டிருப்பதாக லோகநாதன் தரப்புக்கு தகவல் கிடைக்க, லோகநாதன் தனது நண்பர்கள் 6 பேர் கொண்ட கும்பலுடன் சென்று முத்துக்குமாரை வழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 பின்னர், கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் லோகநாதன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து முத்துக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது.

 பின்னர், தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான லோகநாதனை நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவரது கூட்டாளிகளான அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த குமரேசன் (24), இளஞ்செழியன் ( 24), தினேஷ் என்கிற கூல் தினேஷ் ( 24), பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி (37) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பிச்சென்ற ஒருவரை தேடி வருகின்றனர். கைதான லோகநாதன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; எனது தந்தை பெரியசாமி அதிக அளவு பன்றி வளர்த்து அதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் தொழில் முழுவதும் எனது சித்தப்பா கேபிள் சேகர் கைக்கு சென்றது. அவர் அந்த வருமானத்தை தனது மனைவி குழந்தைகளுக்கு செலவழித்து வசதியாக வாழ வைத்தார். நான் மட்டும் இல்லாமல் எனது சகோதரர்கள் தங்கமணி, சிலம்பரசன், ஆகியோர் உள்ளூர் மாநகராட்சி பள்ளிகளில் படித்தனர். ஆனால் சித்தப்பாவின் மகன் மகள்கள் கொடைக்கானல் காண்வெண்ட் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தனர்.

 இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. பின்னர் எங்கள் அண்ணன் சிலம்பரசன் வளர்ந்து ஆளாகிய பின்னர் சொத்தை பிரித்து தருமாறு கேட்டோம். அதற்கு கேபிள் சேகர் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அவரை கொலை செய்தோம். இந்த முன் விரோதத்தில் எனது அண்ணன் சிலம்பரசனை முத்துக்குமார் கொலை செய்தார்.

 பின்னர் முத்துக்குமாரை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து வந்தோம். அவருக்கு திருமணம் நிச்சயித்து திருமணமும் வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்தது. எப்படியும் போட்டுத்தள்ளுவது என முடிவெடுத்திருக்கும் நிலையில், திருமணத்திற்கு முன்னதாகவே தீர்த்துக்கட்டிவிடவேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி, நாங்கள் வைத்த பொறியில் சிக்கிய முத்துக்குமாரை போட்டுத்தள்ள சென்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டினான். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் கண்மூடித்தனமாக என் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து முத்துக்குமாரை தீர்த்துக் கட்டினோம் என போலீஸாரிடம் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

 திருச்சி அரியமங்கலத்தில் முன்னாள் கவுன்சிலர் மகன் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொலி சமூக ஊடகங்களிலும் வைரலானது. அதேபோல் இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியான லோகு என்கின்ற லோகநாதன் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது அருகில் உள்ள வாய்க்கால் பாலத்தில் விழுந்ததால் கணுக்காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதால், மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.

க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment