scorecardresearch

மோடி தலைமையில் ஜி20 ஆலோசனை கூட்டம்; இ.பி.எஸ்-க்கு அழைப்பு

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்; அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

மோடி தலைமையில் ஜி20 ஆலோசனை கூட்டம்; இ.பி.எஸ்-க்கு அழைப்பு

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில், இந்தோனேசிய அதிபர் பிரதமர் மோடியிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார். இந்தியா டிசம்பர் முதல் நாளில் இருந்து முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்தியா ஓராண்டிற்கு தலைமை பொறுப்பில் இருக்கும்.

இதையும் படியுங்கள்: இ.பி மட்டுமல்ல… இந்த 7 துறை அரசு உதவிகளுக்கு ஆதார் கட்டாயம்: உஷார் மக்களே!

இந்த ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இந்தநிலையில், இந்தக் கூட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk leader eps invited to g20 advisory meeting headed by pm modi

Best of Express