கோவையில் ஸ்டாலின் திறந்த பாலம்: உரிமை கோரி அ.தி.மு.க கொண்டாட்டம்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை பார்வையிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை நடைமுறை படுத்துமாறு தி.மு.க அரசை வலியுறுத்தினார்.

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை பார்வையிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை நடைமுறை படுத்துமாறு தி.மு.க அரசை வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
velumani

கோவை அவினாசி சாலையில் நேற்று முதலமைச்சர் மும்.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார். அப்போது பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணியை வாழ்த்தி அ.தி.மு.க-வினர் கோஷங்கள் எழுப்பினர். மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் வரவேற்றனர். 

Advertisment

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  எஸ்.பி.வேலுமணி கூறியதாவது,  50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அவினாசி சாலையில் இருந்த நெரிசலால் மக்கள் அவதியடைந்ததால் மேம்பாலம் வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தோம் அப்போது மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்க வேண்டியிருந்தது. முழு நிதியையும் முதலமைச்சராக இருந்த பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி  ஒதுக்கி தந்தார். அ.தி.மு.க ஆட்சியில் 55 சதவீதம் பாலப் பணிகள் நிறைவு செய்யப்பட்டது, 

ரூ.1,621 கோடிக்கு மாநில அரசின் நிதியுடன் நிர்வாக ஒப்புதலும்  வழங்கப்பட்டது என்றார். மேலும் , ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பணி செய்யவில்லை. காலதாமதம் செய்து பாலத்தை திறந்து உள்ளனர் என குற்றம் சாட்டிய எஸ்.பி.வேலுமணி, கோவையில் உள்ள கடுமையான நெரிசலை கட்டுபப்டுத்த மேம்பாலங்கள், சாலைகள் கட்டுமானம் தந்தது எடப்பாடி பழனிசாமி தான் என குறிப்பிட்டார் 

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பாலத்தை இன்னும் இந்த அரசு முடிக்காமல் உள்ளது  என குற்றம் சாட்டிய அவர், அவினாசி மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டது எங்களுக்கு சந்தோசம் தான் அவர் கோவையின் அடையாளம் என தெரிவித்தார். தொடர்ந்து கோவைக்கு 4.5 ஆண்டுகளாக எதுவும் தி.மு.க அரசு  அறிவிக்கவில்லை  அதிமுக கொண்டு வந்த திட்டத்தைதான் தொடர்ந்து முதல்வர் திறந்து வைத்து வருகிறார் 

Advertisment
Advertisements

திறக்கப்பட்டுள்ள பாலத்தில் வேககட்டுப்பாடு கேமரா பொருத்த வேண்டும். முறையாக டைவர்சன் செய்து விபத்தில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர், இருக்கின்ற காலத்திலாவது சரவணம்பட்டி பாலத்துக்கு நிதி, அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்க நிதி போன்ற நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்கலாம் எனவும் வலியுறுத்தினார்.

Admk Sp Velumani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: