Advertisment

சசிகலா விவகாரத்தில் ஒபிஎஸ் – இபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார்கள்; அதிமுக சென்னை மா.செ.,கள் நம்பிக்கை

ADMK leaders say OPS EPS will take decision on Sasikala issue: சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் ஒருசேர தக்க முடிவுகளை எடுப்பார்கள் என சென்னையை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கருத்து

author-image
WebDesk
New Update
aiadmk resolutions passed against sasikala, salem district admk meeting, அதிமுக, சசிகலா, சேலம் மாவட்ட அதிமுக தீர்மானம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், who is next target of edappadi palaniswami, eps, sasikala, ops, aiadmk

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் ஆராய்ந்து தக்க முடிவுகளை எடுப்பார்கள். ஆளுக்கு ஒரு கருத்தை பேசவேண்டாம் என அதிமுகவின் அமைப்புரீதியாக உள்ள 5 சென்னை மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என சில நாட்களுக்கு முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கூறியது பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று உறுதிபட கூறியுள்ளனர். இந்த நிலையில் ஒபிஎஸ்ஸின் தம்பி தினகரன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்டது சர்ச்சையானது. மேலும் அதிமுகவைச் சேர்ந்த சிலரும் இந்த விவகாரத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து சென்னையின் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்யா, ராஜேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் சசிகலா விவகாரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லிய கருத்திருக்கு ஆளுக்கு ஒரு கருத்தை சொன்னால் அது சரியாக இருக்காது. அப்படி பேசுபவர்கள் மீது கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த விவகாரம் குறித்து சரியான முடிவை ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் ஒருசேர தக்க முடிவுகளை எடுப்பார்கள் என்றும் அவர்கள் அந்த வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sasikala Vs Aiadmk Admk Ops Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment