What will happen to OPS, Vaithilingam and Manoj Pandian MLA posts?: அ.தி.மு.க கட்சி அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் எம்.எல்.ஏ பதவி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அ.தி.மு.க.,வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒற்றை தலைமை பிரச்னையால் பொதுக்குழுவுக்கு செல்லாத ஓ.பி.எஸ் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்து சென்றார். அப்போது ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து, ஓ.பி.எஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: சுயநலக்காரர்… தி.மு.க கைக்கூலி… பொதுக் குழுவில் ஓ.பி.எஸ்-ஐ போட்டுத் தாக்கிய இ.பி.எஸ்!
இந்தநிலையில், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியனின் எம்.எல்.ஏ பதவி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்ததுள்ளது. இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்த மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, எம்.எல்.ஏ பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்மணி கூறுகையில், எம்.எல்.ஏ பதவிக்கு 1% கூட சிக்கல் இல்லை. அவர்கள் தனி பிரிவாக செயல்படுவார்கள். கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால், சபாநாயகரிடம் தகுதி நீக்கம் செய்ய கோர முடியாது. கொறடா உத்தரவும் செல்லாது. இவர்கள் வேறு கட்சியில் இணைந்தால், தகுதி நீக்கம் செய்ய கோரலாம். அதேநேரம், இவர்கள் தனித்து செயல்பட, தனி இருக்கை வழங்க சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கலாம்.
தற்போதைய நிலையில், இ.பி.எஸ் தரப்பு தான் அ.தி.மு.க. எனவே பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணை தலைவர் பதவி பறிக்கப்படலாம். ஆனால் எம்.எல்.ஏ பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
அதேநேரம், ஓ.பி.எஸ் தனி அணியாக செயல்படலாம். ஓ.பி.எஸ் தன்னுடைய நீக்கம் தொடர்பாக நீதிமன்றம், தேர்தல் ஆணையம் செல்லலாம். அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது நீக்கப்படுவது ஆளும்கட்சியின் எண்ணத்தைப் பொறுத்தது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.