எம் .எல் ஏ- வை திருமணம் செய்ய விருப்பமில்லை: தோழி வீட்டில் தஞ்சம் அடைந்த மணப்பெண்!

முடிவு செய்யப்பட்ட அதே தேதியில், வேறு ஒரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம்

அதிமுக எம் .எல் ஏ ஈஸ்வரனை திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லாமல், வீட்டை விட்டு வெளியேறியதாக மணப்பெண் சந்தியா பரபரப்பு வாக்மூலம் அளித்துள்ளார்.

அதிமுக எம் .எல் ஈஸ்வரன்:

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல். ஏ ஈஸ்வரனுக்கு வரும் 12 ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி – தங்கமணி தம்பதியின் மகள் சந்தியா தான் மணப்பெண்.

இந்த திருமணத்தை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்திவைப்பார்கள் என்று பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டன. மேலும், பத்திரிகைகளும் உறவினர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில் தான் மணப்பெண் சந்தியா கடந்த 1 ஆம் தேதி காணாமல் போனார்.

எம் .எல் ஈஸ்வரன் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் பெண், காணாமல் போன சம்பவம் சமூகவலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகியது. இந்த சம்பவத்தை பலரும் நகைச்சுவையுடன் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தான் சந்தியாவின் தாயார் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார், மணப்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் மணப்பெண் சந்தியா திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனது கல்லூரி தோழி வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜரான சந்தியா,நீதிபதி முன்பு, தோழில் வீட்டில் தஞ்சம் அடைந்ததற்கான காரணத்தை போட்டு உடைத்தார்.அவர் கூறியதாவது, “ 43 வயதாகும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தன்னை விட 20 வயது மூத்தவர்.

அவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க என் பெற்றோர்கள் முயற்சித்தனர். இந்த திருமணத்தில் துளியும் எனக்கு விருப்பமில்லை” என்று கூறினார். இதையடுத்து, விருப்பம் இல்லாமல் பெண்ணிற்கு திருமணம் செய்துவைப்பது தவறு என்றும், சந்தியாவை திட்டவோ அவதூறாக பேசவோ கூடாது என்றும் அவரது பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதே போல் எம் எல் ஏ ஈஸ்வரனுக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதே தேதியில், வேறு ஒரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close