அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் நிர்மலா சீதாராமன் உடன் சந்திப்பு ஏன்? வானதி சீனிவாசன் விளக்கம்

SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிர்மலா சீதாராமன் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார் - வானதி சீனிவாசன்

SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிர்மலா சீதாராமன் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார் - வானதி சீனிவாசன்

author-image
WebDesk
New Update
BJP Vanathi srinivasan.jpg

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று(அக்.4) விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பா.ஜ.கவினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.இந்நிகழ்வில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமனை வழியனுப்பி வைத்தார்.  

Advertisment

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "நேற்று 1 லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எனப் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் உதவி கிடைக்கவில்லை என்று சொன்னார். அவரது கோரிக்கையும் கேட்கபட்டது எனத் தெரிவித்தார்.

அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சினைகளுக்காக நிதியமைச்சரை சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்றார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து, கோவையில் SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து  நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

மேலும்,  நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை.  கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை.

கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்ததாகவும், அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை எனவும் தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும். நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை.  மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம்" என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: