Advertisment

திடீர் உடல் நலக்குறைவு: அப்பல்லோவில் நத்தம் விஸ்வநாதன் அனுமதி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (ஜூலை 30) அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
natham viswanathan

Natham Viswanathan

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (ஜூலை 30) அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே கிளம்பிச் சென்ற நத்தம் விஸ்வநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நரம்பியல் பிரச்சனை காரணமாக விஸ்வநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment