scorecardresearch

‘குறைந்த வாக்குகள் பெற்றால் அசிங்கம்’: கர்நாடகாவில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர்கள் வாபஸ்

தற்போது தங்களின் தரப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள் என ஓ.பி.எஸ்., தரப்பு அறிவித்துள்ளது.

ops

கர்நாடகாவில் அதிமுக ஓ.பி.எஸ்., தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த குமார் உள்ளிட்ட வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் அதிமுக பெயரில் மூன்று வேட்பாளர்களை ஓ.பி.எஸ்., தரப்பு அறிவித்த‌து. அதில் காந்திநகர் வேட்பாளர் குமாரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அறிவித்த‌து.

ஆனால், அதிமுகவின் பெயரை மோசடியாக பயன்படுத்தியதாக கர்நாடக மாநில அதிமுக சார்பில் புகார் அளித்த‌தால், விளக்கம் கேட்டு வேட்பாளர் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப‌ப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது தங்களின் தரப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., ஆதரவாளர் புகழேந்தி, “யாருக்கும் பயந்தோ, நெருக்கடியாலோ வேட்பு மனுவை திரும்ப‌ப் பெறவில்லை, மிகக் குறைவான வாக்குகள் பெற்று அசிங்கப்படுத்த வேண்டாம் என்பதால் இந்த முடிவு எடுக்கிறோம்”, என்று தெரிவித்தார்.

நாளை ஓ.பி.எஸ்., சார்பில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திடீரென வேட்பாளர்களை திரும்ப‌ப் பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk ops withdrawal from karnataka election 2023