25ம் தேதி சேலத்தில் நடைபெறும் அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார் எடப்பாடி

சேலத்தில் நடக்கும் கண்டன பொது கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் நடக்கும் கண்டன பொது கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார் எடப்பாடி பழனிசாமி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

அதிமுக கண்டன பொதுக்கூட்டம் : சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றனர்.

Advertisment

வருகின்ற 25ம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம்

அப்போது, 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கு திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என குற்றம் சாட்டி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களிலும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகின்ற 25ம் தேதி ஏற்பாடு செய்திருக்கிறது அதிமுக கட்சி.

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச “இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது அந்நாட்டு ராணுவத்திற்கு இந்தியா உதவி செய்தது” என சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு நேர்காணலில் பதில் அளித்ததை சுட்டிக் காட்டினார்.

Advertisment
Advertisements

யார் யார் எங்கே தலைமை ஏற்கிறார்கள்?

இந்த தீர்மானத்தின் படி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். அதே போல் தேனியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வமும், சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் ஜெயக்குமாரும், திருவள்ளூர் மாவட்ட பொதுக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனனும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தலைமை வகிக்க உள்ளனர்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: