Advertisment

அதிமுக முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது: எம்ஜிஆர் நிழல் ஆர்.எம்.வீரப்பன்

அதிமுக வெற்றி பெற்ற இடங்களுக்கு காரணம், எம்.ஜி.ஆர் விதைத்து சென்ற விதைகளே தான். ஜெயலலிதா பணத்தால் கட்சியை நடத்தினார். ஆனால், தற்போதுள்ள தலைவர்களால் அதையும் செய்ய முடியவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிமுக முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது: எம்ஜிஆர் நிழல் ஆர்.எம்.வீரப்பன்

தமிழ்நாட்டின் மூத்த திராவிட அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரின் கழகத் தலைவர் ஆவர். எம்.ஜி.ஆரின் நிழலாக வளம் வந்த இவர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் பதவி வகித்தார். எம்ஜிஆர் கழகம் மற்றும் கம்பன் கழகத்தின் தலைவராக இருக்கும் ஆர்எம்வி, தற்போது தி.நகரில் உள்ள திருமலை பிள்ளை சாலையில் உள்ள அவரது வீட்டில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

Advertisment

கடந்த மாதம், செப்டம்பர் 8 ஆம் தேதி, தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஆர்.எம்.வீரப்பனுக்கு, முதலமைமச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

publive-image

பல ஆண்டுகளால் அரசியல் தொடர்பான கருத்துகளை பகிர்வதை தவிர்த்து வந்த அவர், தற்போது ‘Times of India’ நாளேடுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் பல முக்கிய விஷயங்கள் குறித்து பகிர்துகொண்டுள்ளார்.

அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை

அவர் பேசுகையில், "திமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணாதுரையின் மகத்துவத்தை பாராட்டி தனது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ள வைத்தவர் அண்ணா தான். அவர் தமிழிலும், ஆங்கிலுத்திலும் சிறப்பாக பேசும் திறமை கொண்டவர். அவர் தேர்தலில் தோற்றபோது, ராஜாஜி அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்பதற்காகவே பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பார்.

எம்ஜிஆருடன் அதிமுக காலம் முடிந்தது. அதன்பின் ஜெயலலிதா தலைமைக்கு வந்ததும் கட்சியானது அண்ணா-திமுக என இல்லாமல், ஜெயலலிதா-திமுகவாக மாறியது. தற்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகான அதிமுகவிற்கு இனி எதிர்காலம் கிடையாது.

publive-image

எம்ஜிஆர் மறைவை தொடர்ந்து, ஜானகி அம்மாவை ஆதரித்தது ஏன்?

நான் ஜானகி அம்மாளை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்று கூறினேன். ஏனென்றால், ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை ஜானகி அம்மாள் கடைபிடித்தால் எம்.ஜி.ஆரின் பெயர் கெட்டுப்போய்விடும். நான் அதை விரும்பவில்லை. ஜானகி அம்மாவை வருங்கால முதல்வர் என்று ஒரு அனைவரும் சொன்னபோதும், நான் அந்த வழியில் நிற்கவில்லை. தான் எப்போதுமே ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையிலேயே இருந்தேன்.

ஜெயலலிதா அமைச்சரவையில் இணைந்தது ஏன்?

1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்ற பிறகு அவரது அமைச்சரவையில் தான் சேர்வதற்கு காரணமாக இருந்தவர் சசிகலாவின் கணவர் என்.நட்ராஜன் தான். கட்சியின் நலனுக்காக இருவரையும் அழைத்து சமரசம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி பேசியதால் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற சம்மதித்தேன்.

publive-image

நான் அமைச்சராக பொறுப்பேற்றாலும், எனக்கும் ஜெயலலிதாவுக்கு இடையை பிரச்சினைகள் இருந்து வந்தது. அதன் ஒரு பகுதியாகதான் அதிமுக அரசுக்கு எதிராக ரஜினி பேசியபோது நான் மேடையில் இருந்தேன் என்ற காரணத்தை சொல்லி, என்னை கட்சியை விட்டு 1995ல் ஜெயலலிதா நீக்கினார். நான் பார்வையாளராக தான் அமர்ந்திருந்தேன், ஆனால் நான் மேடையில் அமர வேண்டும் என ரஜினி தான் வலியுறுத்தினார்.

அதிமுகவின் எதிர்காலம் என்ன?

கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை, அதிமுக வெற்றி பெற்ற இடங்களுக்கு காரணம், எம்.ஜி.ஆர் விதைத்து சென்ற விதைகளே தான். ஜெயலலிதா பணத்தால் கட்சியை நடத்தினார். ஆனால், தற்போதுள்ள தலைவர்களால் அதையும் செய்ய முடியவில்லை. அதிமுகவிற்கு அரசியலில் எதிர்காலமே கிடையாது ; இனி வரும் தேர்தல்களில் அதிமுகவால் வெற்றி பெறவே முடியாது.

publive-image

காங்கிரஸ் தவறுகளால், பல மாநிலங்களில் வளர்ந்த பாஜகவால், தமிழ்நாட்டில் முடியவில்லை. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக, அண்ணா நிறுவிய திமுக போல் முழு பலத்துடன் உள்ளது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்றால் புதிதாக ஒருவர் முளைத்து வரவேண்டும். திமுகவை எதிர்க்க தமிழ்நாட்டில் யாரும் இல்லை" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Jayalalithaa Dmk Stalin Sasikala Rm Veerappan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment