கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு வழங்கிய நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முதல்வா் பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மனு வழங்கினாா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் - அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கிண்டியிலுள்ள ராஜ்பவனில் அதிமுக எம்பி வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் தற்போது ஆளுநரை சந்தித்தனர்.
சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசுகையில், “கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் பொய் சொல்கிறார். கொடநாடு பங்களாவில் 2000 கோடி இருந்தது என்பது எப்படி முதல்வருக்கு தெரியும்? கொடநாடுவில் என்ன இருந்தது என்பதை சசிகலா தான் கூற வேண்டும்” என்று