அ.தி.மு.க சார்பில் கள்ளகுறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் இன்று நடந்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்தும், சி.பி.ஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க கூட்டணி கட்சியான தே.மு.தி.கவின் பொதுச் செயலாளர் பிரேமலதா உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது “ சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தி.மு.கவின் முகத்திரை கிழியும் என்பதால் மறுக்கின்றனர். எதிர்கட்சியிகளின் குரல்வளையை நசுக்க நினைத்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். 2026 நிச்சயம் ஆட்சி மாறும். அ.தி.மு.- தே.மு.தி.க கூட்டணியில் நல்லாட்சி மலரும்” என்று பேசினார்.