ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பிளவு பட்டு மூத்த தலைவர்கள் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றன. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணி என செயல்பட்டு வருகின்றனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த புகழேந்தி அண்மையில் தன்னுடைய ஆதரவை விலகிக் கொள்வதாக கூறி வெளியேறினார். அதைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி எடப்பாடி பழனிசாமி, அன்புமணி குறித்து சீமான் கடுமையாக பேசுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், "திராவிட இயக்கம் ஏமாற்றும் இயக்கம் என சீமான் பேசிவருகிறார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கிறது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளது. அதிமுக போட்டியிடவில்லை.
இந்நிலையில், சீமான் ஏன் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்கிறார். சீமான் ஏன் ஸ்கேக் ஆகிறார். பழனிசாமி சொன்னால் அவருக்கு எதிராக வாக்களிக்கிறார்கள். அவருக்கு ஆதரவாக யாரும் வாக்களிப்பதில்லை. ஆனால் சீமான் அவரிடம் ஆதரவு கேட்கிறார்.
சீமான் நிலைபாட்டில் இருந்து ஏன் மாறுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எவ்வளவு ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவர் ஏன் இன்று ஆதரவு கேட்கிறார். எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்து பேசிவிட்டு இப்போது ஆதரவு கேட்கிறார்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“