Advertisment

ஜெ.பாணியில் இறங்கி அடித்த எடப்பாடி... யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்து அசத்தல்.

இதுப்போன்ற நிகழ்வு இனி ஒருபோதும் நிகழாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெ.பாணியில் இறங்கி அடித்த எடப்பாடி... யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்து அசத்தல்.

admk Rajya sabha election candidates

admk Rajya sabha election candidates : அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இதில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் சந்திரசேகரன் ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் வைத்து பார்த்தால் அதிமுக மற்றும் திமுக கட்சிகளால் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

இதில் திமுக ஏற்கனவே அறிவித்தப்படி 2 இடங்களில் திமுக வேட்பாளர்களும், 1 இடத்தில் மதிமுக வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளனர். அதே போல் அதிமுக-வில் இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும், ஒரு இடம் கூட்டணி கட்சியான பாமகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (6. 7.19) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வுள்ள நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் போட்டியிட இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு:

அன்வர் ராஜா, கே.பி. முனுசாமி, கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது கட்சியில் இருக்கும் சாதாரண நிர்வாகிகளுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகளே அதிரூப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கெனவே வேலூரில் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படும் முன்பே இவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

publive-image

ஜெ. பாணியில் எடப்பாடி:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களுக்கும், சாதாரண கழக நிர்வாகிகளுக்கும் அவர்களின் பங்களிப்பை பார்த்து தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படும். அப்படி ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டம் எத்தனையோ நிர்வாகிகள் இன்று அமைச்சர்களாகவும், கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்.

அவரின் மறைவுக்கு பின்பு இதுப்போன்ற நிகழ்வு இனி ஒருபோதும் நிகழாது என்றே நிர்வாகிகள் சிலர் முனுமுனுத்தனர். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி தற்போது இறங்கி அடித்துள்ளார்.

Aiadmk Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment