ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.கவில் தென்னரசு போட்டியிடுகிறார். நாம் தமிழர், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சையாக பலரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் பரோட்டா சூட்டும், பாத்திரம் கழவியும், இஸ்திரி போட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, காங்கிரஸின் ப.சிதம்பரம் உள்பட பலர் பிரச்சாரம் செய்தனர். அதேபோல் அ.தி.மு.கவின் தென்னரசுக்கு முன்னாள் அமைச்சர்கள் வாக்குச் சேகரித்தனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதோடு கரும்பலகையில் தி.மு.க அரசின் மின்சாரக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வரி உயர்வு உள்ளிட்டவைகளை எழுதியும் அதை மக்களுக்கு பாடமாக எடுத்தும் பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/