/indian-express-tamil/media/media_files/LnOQmT1YcDGTbmERaKk3.jpg)
அ.தி.மு.க. தலைமை கொடுத்த அழுத்தத்தால் செல்லூர் ராஜூ, ராகுல் காந்தி குறித்த பதிவை நீக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ (Sellur Raju) எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது
இதனையடுத்து, நாடாளுமன்ற தேர்தலின் தற்போதைய நிலையை அறிந்து காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. ஆதரிக்க தொடங்கி விட்டதோ என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக தெரிவித்தனர். இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, 'ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை' என்று கூறினார். அவருடைய இந்த பதிவானது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், செல்லூர் ராஜூவின் எக்ஸ் தள பதிவை பாராட்டி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று திடீரென, ராகுலை பற்றி புகழ்ந்த பதிவை செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார். அவரின் ராகுல் காந்தி தொடர்பான கருத்து அ.தி.மு.க மூத்த தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், அ.தி.மு.க. தலைமை கொடுத்த அழுத்தத்தால் செல்லூர் ராஜூ, ராகுல் காந்தி குறித்த பதிவை நீக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.