அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தர்மபுரியில் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கியபோதே அடிப்படை தொண்டர்களால் பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று சொன்னார்.
அதன் அடிப்படையில், இதுவரை அதிமுக-வின் பொதுச்செயலாளர் தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அத்தகைய வழிமுறையை கைவிட்டுவிட்டு, 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவேண்டும், 5 வருடம் தலைமை பொறுப்பாளராக இருக்கவேண்டும் என்று சர்வாதிகாரமாக தான் சம்பாதித்த பணத்தை வைத்து, இந்த கட்சியை தனது குடும்ப சொத்தாக நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதை எதிர்த்து ஒரு சாதாரண தொண்டரும் இந்த இயக்கத்தில் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்ற தலைமையின் விதியை மீண்டும் நடைமுறைப்படுத்த, இந்த இயக்கத்தை ஒன்றுபடுத்தி, முன்னாள் தலைவர்களின் எண்ணப்படி மீண்டும் தமிழக ஆட்சிக்கு வர இன்று ஓ.பி.எஸ்., போராடிக்கொண்டிருக்கிறார்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil