விஜய் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வியூகம்: ஓய்வு பெற்ற ஐ.ஜி தலைமையில் ஆலோசனைக் குழு அமைப்பு

த.வெ.க தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் ஓய்வு பெற்ற ஐ.ஜி ரவிக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த குழுவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் 10-க்கும் மேற்றோர் இடம்பெற்றுள்ளனர்.

த.வெ.க தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் ஓய்வு பெற்ற ஐ.ஜி ரவிக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த குழுவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் 10-க்கும் மேற்றோர் இடம்பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
TVK IG rtd

த.வெ.க பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்டமிடவும், த.வெ.க தொண்டா்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமையில் திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. Photograph: (Image Source: @TVKHQITWingOffl/X)

த.வெ.க தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் ஓய்வு பெற்ற ஐ.ஜி ரவிக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த குழுவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் 10-க்கும் மேற்றோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆளும் கட்சித் தரப்பினரும் த.வெ.க-வினர் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, ஒரு மாத காலம் அமைதி காத்த த.வெ.க-வினா் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். 

Advertisment
Advertisements

இந்நிலையில், த.வெ.க பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்டமிடவும், த.வெ.க தொண்டா்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமையில் திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

த.வெ.க தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரத்தின் போது, தொண்டா்களைக் கட்டுப்படுத்த தொண்டா் படை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 468 போ் இத்தொண்டா் படையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். 

மேலும், விஜய்யின் நிகழ்ச்சிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திட்டமிடவும், த.வெ.க தொண்டா் படைக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமையில் திட்டமிடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவில் ஒய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி-கள் சஃபியுல்லா, தில்லைநாயகன், ஆா்.சிவலிங்கம், லக்ஷ்மிநாராயணன் மதியரசு உள்பட 10 போ் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனா். 

இதைத் தொடர்ந்து, த.வெ.க தொண்டா் படையினருக்கான ஆலோசனைக் கூட்டம் த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமையில் திட்டமிடல் குழு, த.வெ.க தொண்டா் படையினருக்கு ஆலோசனைகளை வழங்கினா். இதில், த.வெ.க தோ்தல் மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச்செயலா் கே.ஜி.அருண்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: